மீதொட்டுமுல்ல சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையினை தயாரிப்பதற்காக ஓய்வுப்பெற்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய குற்றவாளிகள் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் எனவும்,இதற்கான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

