வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

356 0

வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஸ்குமார் தலைமையில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக புகையிரத கடவை காப்பாளர்கள்  போராட்டத்தை மேற்கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிசார் தங்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த புகையிரத கடவை காப்பாளர்கள், இலங்கை முழுவதும் 3500 ஊழியர்களும் வடக்கு மாகாணத்தில் 450 ஊழியர்களும் புகையிரதக் கடவை காப்பாளர்களாக கடந்த நான்கு வருடங்களாக பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் நாளோன்றுக்கு 250 ரூபா கூலிக்கு கடமையாற்றிவருவதாக தெரிவித்தனர்.

இதனால் தங்களுக்கு அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்றும் நிரந்தர நியமனக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 10ஆம் திகதி தொடக்கம் தாம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்க்ள தெரிவித்துள்ளனர்.