பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 25முதல் 28 வேலை நாட்களுக்குள் அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும்.
அத்துடன் அகதிகளது விண்ணப்பங்களை விசாரணை செய்யும் நீதிபதிக்கு, குறித்த விண்ணப்பதாரியை அனுமதிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகதி அந்தஸ்த்து கோருவோரில் பிரித்தானியாவில் தங்கி இருக்க தகுதியற்றவர்களை உடனடியாக வெளியேற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் ஊடாக அகதிகள், முகாம்களில் தடுத்து வைக்கப்பட வேண்டிய காலமும் குறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 100 நாட்களுக்கு மேலும் அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.
இந்த சட்டம், பிரித்தானியாவில் உள்ள ஈழ அகதிகள் மீதும் அதிக தாக்கம் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

