சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

325 0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய வெலிகம – பெலென கடற்பகுதியில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து தலா 20 சிகரெட்டுக்கள் அடங்கிய 10 பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைதானவர் உக்ரைன் பிரஜை எனத் தெரியவந்துள்ளது. அவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.