உருகுணுப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கை (17) ஆரம்பிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான காமினி சேனாநாயக்க அறிவித்துள்ளார்.
திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக ருகுணுப் பல்கலைக்கழகத்தின் விவசாரய பீடமும், தொழில்நுட்ப பீடமும் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக ஏனைய சகல பீடங்களும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.
இந்த சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (17) மீண்டும் வழமைபோன்று நடைபெறும் எனவும் உபவேந்தர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் கூறியுள்ளார்.

