கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டத்தினை வேறு வடிவத்திற்கு மாற்ற நடவடிக்கை

410 0

கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கபட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை ஐம்பத்தி ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறுவடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி கந்தசாமி கோவில் அன்னதான மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே கிளிநொச்யில் உள்ள அனைத்துப் பொது அமைப்புக்களையும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.