வியட்நாம் சென்றுள்ள பிரதமரை வரவேற்கும் அரச நிகழ்வு இன்று

391 0

நான்குநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்கும் அரச நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் வியட்நாம் ஜனாதிபதியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

வியட்நாம் பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று வியட்நாம் சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.