ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய தினம் யாழ் ஆயர் பேனாட் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்துவைக்கப்பட்டது.ஆயரினால் இலங்கை கடற்படை தளபதியிடம் கோரப்பட்டதையிட்டு கடற்படையினரால் கடந்த மாத இறுதி பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகள் குருமார்கள் கலந்து கொண்டனர்.

