மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் – சம்பந்தன்

353 0

மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி பலியான மக்களுக்கு விடுத்துள்ள அனுதாப அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தமது அனுதாபத்தை தெரிவித்த சம்பந்தன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனையும் அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.