அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் பல விற்பனை நிலையங்கள் மீது தீவைப்பு

317 0

அக்குரஸ்ஸ – கொடபிட்டிய பிரதேசத்தில் உள்ள பல விற்பனை நிலையங்கள் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை காலை தீவைத்துள்ளனர்.

இதில் 3 விற்பனை நிலையங்கள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மதுபான போத்தலில் பெற்றோல் நிரப்பி இந்த விற்பனை நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.

இதன்போது தொலை தொடர்பு நிலையம், மின் உபகரண விற்பனை நிலையம், பழக்கடை மற்றும் சில்லறை விற்பனை நிலைத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.