கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் இன்று அதிகாலை ஏற்பட்டது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 26 வயதான தந்தை, ஒன்றரை வயதான பெண் குழந்தை மற்றும் 57 வயதான குழந்தையின் பாட்டி ஆகியோர் பலியாகினர்.
விபத்தில,; பலியான குழந்தையின், 22 வயதான தாய் காயமடைந்த நிலையில் குருணாகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதியான தந்தைக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் சிறிய ரக பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய தினம் பொல்கஹவெல நீதவானிடம் முன்னிலையில் செய்யப்படவுள்ளார்.

