மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இலங்கைக்கு மூன்றுநாள் பயணமாக வருகைதந்த குறித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன் நிறைவில் மத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன போர்க்குற்றங்கள் எவையும் இங்கு இடம்பெறவில்லை என தெரிவித்த கருத்து தொடர்பாக கேட்டபோது முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே . அவ்வாறு குற்றம் இழைத்தார்களா என்பதனை இனம்காணத்தான் இந்த விடயத்தில் பூரண விசாரணை மேற்கொளள வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகின்றோம். என்றார்

