பன்னிப்பிட்டி பகுதியில் அரச மரமொன்றை வெட்டி அகற்றுவதை தடுப்பதற்;காக, உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
வேறதுவே ஸ்ரீ ஜோதி தேரர் மற்றும் கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாக்கல் செய்த, அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான வழக்கு, எதிர்வரும் 9ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஹைலெவல் வீதியின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, பன்னிப்பிட்டி கந்த கபாபு சந்தியில் உள்ள அரச மரத்தை வெட்டி அகற்ற, அரச மரப்பலகை கூட்டுத்தாபனத்திடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆலாசனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி, குறித்த அரச மரம் வெட்டி அகற்றப்படவிருந்தது.
இதற்கு அந்த பிரதேசத்தில் உள்ள தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து அந்த நடவடிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

