தெற்கு அதிவேக வீதியில் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 27 வது கிலோ மீட்டர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றில் தீ பரவியுள்ளது.
கடுவெல தொடக்கம் காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த குறித்த பேருந்தில் திடீர் என தீ பரவியுள்ள நிலையில் சாரதி பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேற்றியுள்ளார்.
அதிவேக வீதி தீயணைப்பு பிரிவு தீ பரவியதனை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

