சுவீடனில் இருந்து கட்டுநாயக்கா ஊடாக நெடுங்கேணி சென்ற தலைவர் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்

338 0

1984 ஆம் ஆண்டு இலங்கையின் விசேட அதிரடிப்படையில் இணைந்து பணியாற்றிய நிமால் லெவ்கே தமது அனுபவங்களை உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மேதாவி இளங்ககூன் மற்றும் நிமால் ஆகியோர் இலங்கையில் விசேட அதிரடிப்படை அமைக்கப்பட்ட பின்னர் முதன்முதலில் கிழக்கு மாகாணப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

அப்போது இலங்கை ராணுவம் கெரில்லா போர் முறையில் பயிற்சி பெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாணம் குறித்து முழு தகவலும் தெரிந்துகொண்ட பின்னரே அப்பகுதிக்கு சென்றிருந்ததாக கூறும் நிமால், 8 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பிரிவை அங்கு வைத்துதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட நுணுக்கங்கள் தமக்கு அதிகம் பயன்பட்டதாக கூறும் நிமால், விஐபி பாதுகாப்பு குறித்தும் விசேட பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத குழுக்கள் அனைத்துமே பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் இருந்தே பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈரோஸ் அமைப்புதான் இலங்கையில் முதன்முதலில் வெடிகுண்டு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது என்றார்.

கிழக்கில் புலிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையே என கூறும் நிமால், ரவி ஜெயவர்தனேவின் பங்கும் முதன்மையானது என்றார்.

1988 ஆம் ஆண்டு பாராளுமன்றம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் தாம் ஈடுபட்டதாக கூறும் நமால், அந்த காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் விடுதலைப்புலிகள் ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன என்றார்.

ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவிற்கு பின்னர் விசேட அதிரடிப்படையினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டனர்.

அப்போது விடுதலைப்புலிகள் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டிய சூழல் உருவானது என கூறிய நிமால், 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்த போது தமக்கு அந்த தகவல் அளிக்கப்பட்டது என்றார்.

ஜனாதிபதி பிரேமதாசவுடன் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறும் நிமால், முதலில் புலிகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துள்ளதாகவும், பின்னர் அதிகாரிகளின் நிர்பந்தங்களுக்கு பணிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சுவீடன் நாட்டில் இருந்து வந்த அந்த குழுவினரில் அன்ரன் பாலசிங்கம், அடேல் ஆன், கே.பி., மதிவதனி மற்றும் பிரபாகரனின் இரு குழந்தைகளும் இருந்ததாக கூறும் நிமால், வந்திறங்கிய அன்றே பிரபாகரனின் மனைவியும் குழந்தைகளும் வடக்கு நோக்கி நெடுங்கேணிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.

ஹில்டனில் தங்க வைக்கப்பட்டிருந்த குழுவினரில் பாலசிங்கம் மட்டுமே தன்னுடன் அதிகம் பேசியதாக தெரிவித்த அவர், லலித் அதுலத்முதலி குறித்தும் தமது கோபத்தை வெளியிட்டதாக தெரிவித்தார். பிரபாகரனால் ஒருபோதும் அமைச்சர் அதுலத்முதலியை மன்னிக்க முடியாது எனவும் பாலசிங்கம் தெரிவித்ததாக நிமால் குறிப்பிட்டார்.

– See more at: http://www.asrilanka.com/2017/04/04/42593#sthash.0yWrqu1q.dpuf