தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை – தொழில் அமைச்சர்

304 0

10 பணியாளர்களை விட அதிகமானவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்தலங்களில் தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் தொழிற்தலங்களில் ஏற்பட்ட விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணியிட விபத்துக்கள் மூலம் மரணிப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத் தொகையை இரட்டிப்பாக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.