இலங்கை மின்சார சேவையாளர் சங்கமும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் போராட்ட அறிவிப்பு

324 0

வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் சேவை கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் இந்த மாதம் ஆறாம் திகதி முதல் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த தொழிற்சங்க பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் எதிர்வரம் 7ஆம் திகதி நாடுதழுவிய அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.