ரஷ்யாவில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் மத்திய ஆசிய நாடு ஒன்றைச் சேர்ந்தவர் என ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் பகுதியில் நிலக்கீழ் சுரங்க தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 11 பேர் பலியானதுடன், 45 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்ட போதும், இது தற்கொலைத் தாக்குதலா இல்லையா என்பது தொடர்பில் குழப்பம் நீடிப்பதாகவும் ரஷ்யாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

