சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

225 0

எல்பிட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை கைது செய்தமை தொடர்பிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.