வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இரு வர்த்தகர்கள் விமான நிலையத்தில் கைது

211 0
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இரு வர்த்தகர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெறுமதி 21 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாஜாவில் இருந்து இலங்கைக்கு வந்த நீர்கொழும்பில் வசிக்கும் 24 வயதுடைய வர்த்தகரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்த கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தகருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17,400 சிகரெட்டுகள் அடங்கிய 87 சிகரெட் அட்டைப்பெட்டிகளை குறித்த இருவரும் பயணப் பையில் மறைத்து வைத்து கடத்த முயன்றபோதே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.