தேர்தல் எக்காரணத்தை கொண்டும் தடைப்படாது

172 0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எக் காரணத்தை கொண்டும் தடைப்படாது என நம்புகிறோம் என பொதுஜன ஐக்கிய முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளில் பொதுஜன ஐக்கிய முன்னணி இம்முறை போட்டியிடுகின்றது. இவ் இரு சபைகளில் போட்டியிடுவதற்கான  வேட்புமனுக்களை  நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள  தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும்,மாவட்ட செயலாளருமான நந்தன கலபடவிடம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  நேற்று(20) நண்பகல் கையளித்தார்.

இதையடுத்து மாவட்ட செயலக நுழைவாயிக்கு அருகில் காத்திருந்த உடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிராக சிலர் நீதி மன்றத்தை நாடியுள்ளனர் இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறாக அமையும் என்பது எமக்கு தெரியாது.
இருப்பினும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறும் என நாம் நம்புகிறோம் என தெரிவித்தார்.

மேலும் நுவரெலியா மாநகர சபையை இம்முறை பொதுஜன ஐக்கிய முன்னணி கைப்பற்றுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உறுப்பினர் பதில் அளிக்கையில் கட்டாயம் சகோதர கட்சிகளை இணைத்துக் கொண்டு மாநகர சபையை கைப்பற்றுவோம் என மேலும் தெரிவித்தார்.