நுவரெலியா விபத்து -உதவிகளை வழங்க ஜீவன் நடவடிக்கை

173 0

நுவரெலியா – நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பக்கத்தில இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, தேஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தில் பயணித்த மாணவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், யாருக்கும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.