தேர்தல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் ஆணைக்குழுவின் தலைவர் இரகசிய சந்திப்பாம்!

167 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர்  சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருவதாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயாதீன அமைப்பான தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடும்போது குறிப்பிட்ட சிலருடன் இரகசியமான முறையில் கலந்துரையாட முடியாது எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப்  தெரிவித்துள்ளார்

தேர்தல் நடத்துவது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறு கலந்துரையாடினால் சட்டமா அதிபருடன் மாத்திரமே கலந்துரையாட வேண்டும்  அவர் கூறியுள்ளார்.