நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற பயங்கரம்!

227 0
நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மது அருந்திய இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு, மோதலாக மாறியதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரும்புக் கம்பியால் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான சந்தேகநபர் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய மாம்புரிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.