கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

152 0
கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல அத்தியாவசிய முன்னேற்றங்கள் காரணமாக பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (28) இரவு 10.00 மணி முதல் நாளை (29) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.