அரசு பள்ளிகளில் பிளஸ் 1 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட உத்தரவு

193 0

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் 9 அரசு பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. அதன்படி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ் 1ல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 1ல் தொழிற்கல்வி பிரிவில் சேர்ந்த மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையுடன் குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு மாணவர்கள் சேர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.