இடைக்கால வரவு செலவுதிட்டத்தில் ஜனாதிபதி செலவீனங்களை குறைப்பார்

190 0

செவ்வாய்கிழமை இடைக்கால வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலவீனங்களை பல மடங்குகுறைக்கவுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மத்தியில் – நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாட்டை இந்த வருட இறுதிவரை  நிர்வகிப்பதற்கான இடைக்கால வரவு செலவுதிட்டத்தை சமர்ப்பிக்கும்போதே ஜனாதிபதி செலவீனங்களை குறைக்கும் அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

சுற்றுலாத்துறையை நம்பியுள்ள நாடு 1948ம் ஆண் சுதந்திரத்தின் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அந்நியசெலாவணி கையிருப்பு முற்றாக தீர்ந்துபோயுள்ளது,அரசநிதி குழப்பநிலையில் உள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரிக்கின்றன.

தனக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதியான ரணில்விக்கிரமசிங்க இடைக்கால வரவுசெலவு திட்டம் சர்வதேச நாணயநிதியத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் என கடந்த மாதம் ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தார்.

செலவீனங்கள் சில நூறு பில்லியன் ரூபாய்களால் குறைக்கப்படும் என தெரிவித்திருந்த ஜனாதிபதி பாதுகாப்பு செலவீனங்களும் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நலன்புரி திட்டங்களிற்காகவும் கடனை திரும்பி செலுத்துவதற்காகவும் அந்த நிதியை பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி நிதிநெருக்கடியால் மோசமாகபாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர்களிற்கு ஆதரவான திட்டத்தை வெளியிடுவார்,வரிஅறவிடும் யோசனைகளையும் ஜனாதிபதி வெளியிடுவார்.

நவம்பர் 2023 இல் முழுமையான வரவு செலவுதிட்டம் சமர்ப்பிக்கப்படலாம்,அதில் பரந்துபட்ட மீட்பு திட்டம் சமர்ப்பிக்கப்படலாம்