மத்திய வங்கி ஆளுநரின் விளக்கமளிப்பு புதன்கிழமை இடம்பெறும்

241 0

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி எனும் தலைப்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் நாளை  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4  மணி வரை பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்கமுடியாத காரணங்களால் செவ்வாய்க்கிழமை இடம்பெறாது எனவும் அந்த கலந்துரையாடல்  புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம்  1 இல் நடைபெறும் எனவும் பிரதி சபாநாயகர்  அஜித் ராஜபக்ஷ  இன்று  திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நிதி விடயங்கள் தொடர்பான எதிர்கால பாராளுமன்ற விவாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினைத்திறனாக பங்குபற்றுவதற்கு பயனுள்ள வகையில்  நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி பற்றிய உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தக் கலந்துரையாடலை இலங்கை மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நடத்தவுள்ளார்.