கிளிநொச்சி – தர்மபுரம், வட்டக்கச்சி பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
வட்டக்கச்சி – ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேடர்கள் ஐந்தை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், இராமநாதபுரம் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பகுதியில் தண்ணீர் இறைக்கும் நீர் பம்பிகை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும், வட்டக்கச்சி கல்மடு பகுதியில் நான்கு துவிச்சக்கரவண்டிகளை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

