துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

270 0

பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை ஜயந்திரபு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவரை கைதுசெய்து மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜெயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மின்னேரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கமய. பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவெவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.