ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் – சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

325 0

201701220107068546_support-of-Jallikattu-Bangalore_SECVPFஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னை நகரில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.