வயதான அரசியல் தலைவர்கள் விலகி இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும் என அமைச்சர் சரத் அனுமுகம தெரிவித்துள்ளார்.
கலகொதவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 65 தொடக்கம் 70 வயதுகளை கொண்டவர்களே அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்றனர்.
வேறு துறைகளில் வயதானவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகின்றது.
எனினும் அரசியலில் அவ்வாறு இல்லை.
இது நாட்டுக்கு பாதிப்பான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

