அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்?- தமிழருவி மணியன் பதில்

247 0

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பதில் அளித்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழருவி மணியன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

* ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ரஜினிக்குத்தான் தெரியும்.

* ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை.

* உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.