யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன்!

68 0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இதுவரை காலமும் பதில் கடமையாற்றி வந்த சதாசிவம் நிமலன், மாணவர் அனுமதிக்காக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து, கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராக்க் கடமையாற்றும் ஆர். செந்தில்மாறன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான ஆர். செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், பட்டப் பின் தகைமையையும் கொண்டவர். இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று, தகுதி பெற்றதுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

கல்வி நிர்வாகம், சட்டம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் திறமையான தகுதி வாய்ந்த ஒருவர் தங்கள் கல்லூரிக்கு பதில் அதிபராக நியமனம் பெற்றிப்பது கல்லூரி சமூகத்தனரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது குறித்து கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் த்த்தமது முகநூல் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த வருடம் பல தடவைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நிரந்தரமாக அதிபர் ஒருவரை நியமிப்பதற்காக பதில் அதிபர் நிமலனை ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் கல்வி அமைச்சு இடமாற்றம் செய்த போதிலும் உயர்மட்ட அழுத்தங்கள் காரணமாக அவை ரத்துச் செய்யப்பட்டிருந்தன என்பதும், கடந்த வருடம் இடம்பெற்ற அதிபர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வில் தற்போது பதில் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர். செந்தில்மாறன் முன்னிலை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.