அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

311 0

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் மட்டக்களப்பு புணானையில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தலைமையில் மட்டக்களப்பு நகரில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த பிக்குகள், மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.