புத்தர் மூடிய கண்களில் தமிழர்கள் வடித்த கண்ணீர்கள்!

898 0

கறுப்பு யூலை இது ஈழத்தமிழ் மக்களின் கண்ணீர் மாதம் . 1983 ஆம் யூலை 23 இல் தென்னிலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள ஏகாதியபத்தியம் காட்டுமிராண்டி்த்தனமாக இனப் படுகொலையை மேற்கொண்டது.

சிங்கள காடையர்கள் தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவை திட்டமிட்டு செய்தார்கள் . தமிழ் இளைஞர்களை கண்ட துண்டமாக வெட்டி கொலை வெறி புரிந்தனர். தமிழ் குழந்தைகளை எரியும் தாரில் தூங்கி எறிந்து கொலை செய்து கோரதாண்டவம் ஆடினார்கள். சுமார் 3,000 அப்பாவித் தமிழர்களைப் பலி எடுத்தது புத்தரின் கோரப்பற்கள். மேலும் தமிழர் சொத்துகள், வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டு அடையாளங்கள் மறைக்கப்பட்டன.

83 இல் தொடங்கிய தமிழர் மீதான இனப்படுகொலை 2009 முள்ளிவாய்கால் வரை நீண்டது. முள்ளிவாய்காலுடன் முற்றுப்புள்ளி வைத்தாக உலகம் எண்ணிக்கொள்கிறது. ஆனால் மௌனமாக இன்று வரை தொடர்கின்றது.

கறுப்பு யூலை கரிய நாட்கள் வெறும் நினைவு நாட்களாக நினைவு கூறுவதால் பலியான எம் உறவுகளின் ஆத்மா சாந்தி அடைந்திடுமா?

83 கறுப்பு யூலை வன் முறைகளே தமிழர் ஆயுதப்போராட்டத்திற்கு உத்வேகம் கெடுத்தது . பேரினவாத நெருப்பில் விடுதலை தீ பற்றிக் கொண்டு மென் மேலும் எரியத்தொடங்கியது.

உலகமயமாக்கலின் ஏகதுவத்தால் விடுதலை நெருப்பு சூட்சுமாக அணைக்கப்பட்டது. எரிதணலாக வீறுகொண்ட விடுதலப் போரளிகள் வல்லாதீக்க சக்திகளின் கபடதனத்தால் சாம்பலாகிப் போகினர். அந்த சாமபல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவைகளாக இளையோர் அணி ஒன்று புற்ப்படும் என்ற நம்பிக்கையுடன் விடுதலை விரும்பிகள் காத்திருக்கின்றனர்.