வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தொடர் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

416 0

k800_20160518_104336புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு இன்று மீண்டும் நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றவாளிகள் 12 பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் தோன்றியிருந்தார்.
மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி எந்தவிதமான விசாரணை அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில் குற்றவாளிகளை மேலும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி, அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
தொடர்ச்சியான விசாரணைக்கு அனுமதி வழங்கிய நீதவான் குற்றவாளிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.