யாழ் சாதிய போட்டி jcb இயந்திரம் மூலம் தேர் இழுத்த கொடுமை

457 157

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப்பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

There are 157 comments

Leave a comment

Your email address will not be published.