யாழில் கோர விபத்து…! இளைஞன் சம்பவ இடத்தில் பலி

8227 0

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தானது இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக்க சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவர் பயணித்துள்ளனர். அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்” பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment