Breaking News
Home / தமிழீழம் (page 20)

தமிழீழம்

கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து – ஒருவர் பலி

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பலியானவர் விஸ்வமடு புன்னைநிராவிப் பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் எள தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பின மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

வன்னேரியில் சுற்றுலா மையம் திறந்து வைப்பு

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 6 மில்லியன் ஒதுக்கீட்டில் வன்னேரிப்   அமைக்கப்பட்ட   கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள   சுற்றுலா மையம் வடமாகாண முதலமைச்சரினால்  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற  வன்னேறிக் குளத்தை அண்டிய பகுதியிலேயே இவ் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது  குறித்த பகுதிக்கு வெளிநாட்டில்  இருந்து  வ  பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை …

Read More »

யாழ் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் “தமிழ் கார்டியன்” ஊடக நிறுவனம் நடாத்தும் ஊடகத் துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப் பொருளிலான கலந்தாய்வு இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி.சபேஸ்வரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.  தமிழ்கார்டியன் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் அபிநயா நாதன், முன்னாள் ஆசிரியர்கள் சுதர்சன் சுகுமார் மற்றும் துஷ்யன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். ஊடகவியலாளர்கள், …

Read More »

யாழ். நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

யாழ்.  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை காலை பயணித்த புகையிரத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீதுபட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக சாவசக்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு …

Read More »

முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த்திட்டம் திறப்பு

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள  சுமார்  நூற்றி ஐம்பது குடும்பங்களின் பாவனைக்கு அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் அவர்களினால் இன்று  முற்ப்பகல்  11.30 மணியளவில்  மக்கள் பாவனைக்கு சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்குத்  திறந்து வைக்கப்பட்டுள்ளது இன்  நிகழ்வில் வடமாகாண  முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் …

Read More »

ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மாகாண சபைக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்திக் …

Read More »

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை  போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இம்மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்த  கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது . இந்நிலையில், சந்தேக நபர்கள் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read More »

முல்வைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 80 ஆவது நாளை எட்டியுள்ளது(காணொளி)

முல்வைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 80 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் காணாமல்போனோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமது உறவுகளின் தகவல்களை பெற விண்ணப்பித்தனர். ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மற்றும் கடந்த 9 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 227 விண்ணப்பங்கள் மாவட்ட …

Read More »

வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது(காணொளி)

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீயை அவதானித்த அயலவர்கள் கூக்குரல் இட்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டு பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பல்பொருள் வியாபார நிலையத்தின் உரிமையாளர், நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இரவு 11.00 மணிக்கு அயலவர்களின் கூக்குரல் கேட்டதைத் தொடர்ந்து கடைக்கு சென்று பார்த்தபோது வியாபார நிலையம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக …

Read More »

தேசிய இளைஞர் தினம் முல்லைத்தீவில் (காணொளி)

தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு செய்த தேசிய இளைஞர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றன. தூய்மையான இலங்கைக்கு இளைஞர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் இன்று காலை முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதன் …

Read More »