குற்றச் செயல்கள் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினரிடம் உடனடியாக தமிழில் முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தினை காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கடந்த வெள்ளிக்கிழமை இரவு துவக்கி வைத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கொன்றில் பின் கதவால் ரிக்கற் விற்றவர்களிடம் நியாயம் கேட்ட சில இளைஞர்களை அங்கிருந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி, புதிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில் காலமானார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.