Breaking News
Home / அனு

அனு

கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (17) கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் …

Read More »

எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களும் அத்தியவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் …

Read More »

பிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி

தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை …

Read More »

ஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது

குளியாபிட்டிய பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு அதிகாரியொருவர் ஹெரோயின் பக்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் 6 ஹெரோயின் பக்கட்டுக்களுடன் பாடசாலைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை …

Read More »

அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு

அரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிறேபந்து ருவன் பத்திரன தெரிவித்துள்ளார். அவர்களுள் 50,000 பேருக்கு இந்த வருட இறுதிக்குள் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இதற்கான சில ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது …

Read More »

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 7.93 கிராம் ஹெரோயினை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது

இந்த அண்டின் கடந்த 06 மாத காலத்தில் கலால் குற்றங்கள் சம்பந்தமாக 25,214 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கலால் திணைக்களம் கூறியுள்ளது.சுமார் 1000 கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடையே சட்டவிரோதமான முறையில் மதுபான தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டமை சம்பந்தமாக 19,145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரோய்ன் உட்பட போதைப் பொருட்களை உடமையில் வைத்திருந்தமை சம்பந்தமாக 3081 …

Read More »

தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ராஜபக்ஷ குடும்பத்தில் நாமலுக்கு அன்றி வேறு எவருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ஷ சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்பட …

Read More »

கூட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இன்று கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர். இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன  எம்.பி. தலைமையில் இன்று (18) இரவு 7.00 மணிக்கு நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. புதிய முன்னணியொன்றை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.  …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com