வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் காலத்தினை வீணடிக்காமல் நடவடிக்கையெடுக்கவும் -இரா.துரைரெட்னம்

வேலையற்ற நிலையில் உள்ள பட்டதாரிகள் தொடர்பில் காலத்தினை இழுத்தடிக்காமல் முறையான திட்டம் ஒன்றிணை மாகாணசபையும் மத்திய அரசும் இணைந்து வகுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் அரச சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று புதன்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.DSC_8832 DSC_8833 DSC_8836 DSC_8837 DSC_8838 DSC_8839 DSC_8842 DSC_8844
மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில் ஆரம்பமான இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இன்று வியாழக்கிழமை மாலை காந்திப்பூங்காவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 1400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர்.வருடாந்தம் பட்டததாரிகள் உருவாகிக்கொண்டுவருகின்றனர். கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் வேலையற்ற நிலையில் உள்ள பட்டதாரிகளின் நலன் தொடர்பான எந்த நிரந்தர திட்டமும் இதுவரையில் இல்லை.
மத்திய அரசாங்கமானது வருடாந்தம் வெளிவரும் பட்டதாரிகளின் நலன்கள் தொடர்பில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டவாறு 2015ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு எந்தவித நியமனங்களையும் வழங்கவில்லை.மத்திய அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் உள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.