பிரேசில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம்

231 0

பிரேசில் நாட்டில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம் ஒன்று நாடு முழுவதும் இடம்பெற்றுது.

தொழிலாளர் சட்டம் மீறப்படுவதாக தெரிவித்தே, குறித்த போராட்டம் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து அங்கு வங்கிகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்தும் முடப்பட்டன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாரி அளவில் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைநகர் ரியோ டி ஜெனரோவில் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் மற்றும் தண்ணீர் பீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகாரர்கள் பேருந்துகள் மற்றும் சிற்றூர்துகள் உட்பட்ட பல வாகனங்கள் மீது தீ வைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.