நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

252 0

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக, டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு பெருக்கம் அதிகமாக உள்ள வெட்டுகாடு பொது சுகாதார பிரிவுகளில் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கும், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.