2016 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

240 0

2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் இன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை உத்தியோக பூர்வ இணையத்தளமாகிய www.donets.lk இல் பார்வை இடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வெளியானது.

இதனையடுத்து மீள்திருத்த பரீட்சாத்திகள் ஜனவரி மாதம் 23 திகதி வரையில் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.