யாழில் திருட்டு! நகைவியாபாரிகளுடன்பொலீஸ் அதிகாரி உடந்தை

193 0
நகைவியாபாரிகளுடன் இணைந்து பங்குப் பணம் பெற்றுவந்த பொலிஸ் உப பரிசோதகர் உட்பட 3 பொலிசார் தொடர்பில் பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் திருட்டுக்களின்போது கொள்ளையிடப்படும் தங்க நகைகளை உருக்கி கட்டியாக்கும் குழுவினருடன் தொடர்பைப்பேணி அவர்களிடம் இருந்து ஒரு பகுதி தங்கத்தினை கப்பமாக தங்கத்தைப் பெற்று வந்த பொலிஸ் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட பங்கீட்டு அளவில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் விடயம் வெளித் தெரிய வந்துள்ளது.
குறித்த குழுவினரிடம் இருந்து இவ்வளவு காலமும் பெற்று வந்த பங்கிலும் விட தற்போது அதிக பங்கினை கோரியதனால் இவர்களின் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமக கான மேலதிக பங்கினை கோரியுள்ளனர். அவ்வாறு கோரிய பொலிசார் தமக்கான பங்குப் பணத்தில் ஒரு பகுதி ஓர் நீதவானுக்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த விடயம் நகைத் தொழிலாளி ஒருவரின் மூலம் கசிந்துள்ளது. இருப்பினும் ஆரம்பத்தில் குறித்த தகவலை மறுத்துள்ளனர். தற்போது மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களுடன் பொலிஸ் உயர் பீடத்தில் முறையிடப்பட்டுள்ளது. அதாவது குறித்த பொலிசார் நகைத் தொழிலாளியிடம் தொலைபேசியில் உரையாடி கப்பம் கோருகின்ற ஒலிப்பதிவு தற்போது ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொலிசார் மட்டத்தில் குறித்த விடயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இச் சம்பவத்தில் ஓர் நீதவானின் பெயரையும் தமக்கு உடந்தையாக பயன்படுத்தியமை தொடர்பிலும்  பொலிசார் தீவிர உள்ளக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய மினம் 3 நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸ் உயரதிகாரி முன்பாக சாட்சியமளித்துள்ளனர். இதில் 3 பொலிசாருக்கும் வழங்கப்பட்ட தங்க நகைகளின் அளவு மற்றும் பணங்களின் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உப பரிசோதகரினை விட சாதாரண பொலிஸ் உத்தியோகத்தருக்கு மட்டும் 10 பவுன் தங்கமும் , 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டமை கடை உரிமையாளரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனையவர்களிற்கு வழங்கப்பட்ட தொகையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் அத்தியட்சகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,  குறித்த விடயம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே மேற்படி விடயம் தொடர்பில் விசாரணையின் பின்பே விபரம் தெரிவிக்க முடியும் . என்றார்.
குடாநாட்டில் இடம்பெரும் திருட்டுக்கள் அதிகரிக்கின்றனவே அன்றி குறைவதாக இல்லை. எனவே இங்கு இடம்பெறும் திருட்டுக்களிற்கும் பொலிசாருக்குத் தொடர்புகள் இருப்பதாக மக்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.