சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 12 ஆவது நினைவேந்தல் கிளிநொச்சியில்

297 0

மாமனிதர் தராகிசிவராமின் (தர்மரட்ணம் சிவராம்)12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

இந் நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதி கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் எனப் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், நினைவுரைகளாக ´தராகியும் இலங்கையின் பூகோள அரசியலும்´ என்னும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக ஊடககற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம் ´தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்தில் சிவாராம்´ என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ´சிவராமின் கனவு´ என்னும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ராதயனும், ´நானும் சிவராமும்´ என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகரும் உரையாற்றவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் துணிச்சலுடனும், ஊடக அறத்துடனும், செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ். ஊடக அமையம் இவ்வாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கும் தராகிசிவராம் ஞாபகாத்த விருது மறைந்த கேலிச்சித்திர கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு, கிழக்கில் நெருக்கடியான சூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தை தொடர்ந்து இம்முறை கிளிநொச்சியில் யாழ். ஊடக அமையத்துடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து ஊடக அமைப்புக்களும் இணைந்து இம்முறை கிளிநொச்சியில் நடாத்துவது குறிப்பிடத்தக்கது.