இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம் – தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

661 0

25 ஏப்ரல் 2017 அன்று இத்தாலி சுதந்திர நாளை முன்னிட்டு Reggio Emilia – Gattatico வில் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படைகளுக்கு எதிராகப் போராடிய 7 சகோதர விடுதலைப் போராளிகளைச் சுட்டுக்கொண்ட அவர்களின் வீட்டில் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலியும் பங்களித்து நிகழ்வின் சிறப்பிற்கு பல இத்தாலிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்கள்.

அத்துடன் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் வருகை தந்த மக்களிற்கு எம் தாயக விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் தமிழீழ மக்களின் இனப்படுகொலை தொடர்பாகவும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விளக்கம் அளித்தார்கள்.

மேலும் எமது அடையாளங்களான தேசியக்கொடி, தமிழீழம், தேசியத்தலைவர் மற்றும் தேசியச் சின்னங்களின் விளக்கமும் காட்சி வடிவில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி.