கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

412 0

23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.

இதில், 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் களமிறங்கிய அனிதா ஜெகதீஸ்வரன் 03.40 மீற்றருக்கு தாவி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 2.90 மீற்றருக்கு பாய்ந்த வி. கிரிஜா வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் எஸ். சங்கவி 18 வயதிற்குட்பட்டவர் பிரிவில் 33.05 மீற்றருக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.